உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புனித நதி எனப் போற்றப்படும் கங்கை நதிக்கு நாள்தோறும் மாலை வேளையில் செய்யப்படும் இந்த ஆரத்தி நிகழ்வில், கொரோனா காரணமாக ஒரு மாதமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தஸாஷ்வமேத் காட் என்ற இடத்தில்,. வாத்தியங்கள் மற்றும் மணியோசை முழங்க, அர்ச்சகர்கள் தீப ஆரத்தி காட்டி கங்கைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.