அனைத்து தொலைதூர ரயில்களிலும் நாளை மறுநாள் முதல் கேட்டரிங் சேவை மீண்டும் துவங்கவுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தொலைதூரம் செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்களில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த கேட்டரிங் சேவை கடந்தாண்டு மார்ச் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதால், கடந்த மாதம் 22ம் தேதி முதல் 80 சதவீதம் ரயில்களில் கேட்டரிங் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து ரயில்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாளை மறுநாள் முதல் மீண்டும் உணவு டெலிவரி சேவையை வழங்க ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.