சீனாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அந்த பாதிப்புகளில் இருந்து உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில், கொரோனா பின்னர் டெல்டா, டெல்டா பிளஸ் என மாற்றப்பட்டது. சமீபகாலமாக ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கடந்த மாதம் நவம்பர் 27 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ், உலகின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

இந்நிலையில், சீனாவில் முதல் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வடக்கு சீனாவின் டியான்ஜின் பகுதிக்கு வந்த ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!