நீதித்துறை தள்ளாடுகிறது- நீதிபதி சந்துரு


மீடூ விவகாரத்தில் தெளிவான பார்வையில்லாமல் நீதித்துறை தள்ளாடி 
வருவதாகவே நான் பார்க்கிறேன் என ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி 
சந்துரு தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி எழுதியுள்ள 'மீடூ' 
புத்தக வெளியீட்டு நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ஆர் ஆர்ட் 
செண்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற 
நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, 
ஐபிஎஸ் சீமா அகர்வால் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்பு உரை ஆற்றினர்.
நீதிபதி சந்துரு பேசும் போது, சட்டம் படிக்க கூடிய மாணவர்களுக்கு முதல் 
பாடமே தன்னை பற்றி விசாரணைக்கு ஒரு வழக்கு வந்தால் தன்னை விலக்கி 
கொள்ள வேண்டும் என்பது தான் நீதி. மீடூ விவாகரத்தில் முன்னால் உச்சநீதிமன்றம் 
தலைமை நீதிபதி அதை செய்யவில்லை. அப்போது அவர் அதை பற்றி அவர் 
யோசிக்கவில்லை என்றார்.
Translate »
error: Content is protected !!