டெல்லியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பம்பாய் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.
அதன்பின், கர்நாடக முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தியதாக கூறினார். மேகதாது அணை பிரச்சனை குறித்து அடுத்த நடைபெறும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தன்னிடம் உறுதியளித்ததாகவும் பசவராஜ் கூறினார்.