இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது

தமிழகத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்த தவறியவர்களை கண்டறிந்து உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 33 லட்சத்து 46 ஆயிரம் சிறார்கள், தடுப்பூசி போட தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு இதுவரை 25 லட்சத்து 50 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களில் 89 சதவீதம் பேர் என்றும், இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களில் 65 சதவீதம் பேரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!