இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் கடத்த ஜனவரி மதம் முதல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை செலுத்தபட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 86 கோடியே 1 லட்சத்து 59 ஆயிரத்து 11 ஆக உள்ளது என தெரிவித்துள்ளது.