அமெரிக்காவில் மாடர்னா, ஃபைசர் / பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் இதுவரை 39,29,09,995 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இதுவரை 21,43,32,261 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் 18,46,01,450 பேர் 2 டோஸ்களையும் செலுத்தி கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதை கண்டறியப்பட்டவர்களில் சுமார் 20 லட்சம் பேருக்கு 3 வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.