பீகார் மக்கள் மத ஒற்றமையோடு உள்ளனர்

பீகாரில் மக்கள் ஒருவகோருவர் மத ஒற்றமையோடு உள்ளனர்; ஆதலால் பீகாரில் ஹிஜாப் பிரச்சனை இல்லை என பீகார் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெண்கள் “ஹிஜாப்” அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருவது ஏற்க முடியாது என பல்வேறு மாநிலங்களில் பிரச்சனைகளும் சர்ச்சைகளும் எழ தொடங்கி உள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க தொடங்கியுள்ளார்கள். அதன்படி பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, எங்கள் மாநில மக்கள் ஒருவருக்கு ஒருவர் அவர்களின் மதத்தை மதிப்பதால் பீகாரில் “ஹிஜாப்” ஒரு பிரச்சனையாக இல்லை என தெரிவித்தார். மேலும் ஒவ்வொருவரும் அவர்களுடைய கலாச்சாரத்தை கடைப்பிடிப்பவர்கள் என்பதால் எங்கள் மாநில மக்கள் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை எனவும் தன்னுடைய பேட்டியின்போது முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!