சீன இனப்படுகொலையை தனியார் துறைகள் எதிர்க்க வேண்டும்

சீன இனப்படுகொலையை தனியார் துறைகள் எதிர்க்க வேண்டும் என அமெரிக்க வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமிய சிறுபான்மையினரை குறிவைத்து, சீனா மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச அளவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் வீகர் சிறுபான்மையினரைச் சீனா இனப்படுகொலை செய்வதும் சர்வதேச மன்றத்தில் பெரும் பேசு பொருளாக உருவெடுத்துள்ளது. இதனை எதிர்க்கும் வண்ணம் சீனா-வில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சீனாவில் தனது கிளையை திறந்துள்ளது. இதையடுத்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடையே பேசிய செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளை தனியார் நிறுவனங்கள் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Translate »
error: Content is protected !!