நீட் தேர்வில் நலிந்த பொது பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டால், மாணவர்களின் திறமையில் எந்த வித சமரசத்தையும் செய்து கொள்ள முடியாது என உச்சநீதிமன்ற திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுபிரிவினருக்கு 10 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் இட ஒதுக்கீட்டுக்கு வரையறையை நிர்ணயிப்பது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்ற தனது தீர்ப்பை தெளிவுப்படுத்தியுள்ளது. அதன்படி இட ஒதுக்கீடு மாணவர்களின் தகுதிக்கு முரணானது இல்லை என தெரிவித்துள்ளது. ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரையறையை நிர்ணயிப்பதன் மூலம் மாணவர்களின் திறனில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் தகுதியின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.