உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சீனாவில் 91,738 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 386 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இதுவரை 97,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.