விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பெயர் சூட்டல்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சாலைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆக்ராவில் உள்ள காடியா ஆசம் கான் சாலைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் நினைவாக ‘ஸ்ரீ அசோக் சிங்கால் மார்க்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், அடிமை காலத்தை நினைவுபடுத்தும் இடங்களின் பெயர்களை மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காடியா ஆசம் கான் சாலைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறினார். இதேபோல் கடந்த நவம்பரில் ஆக்ராவில் உள்ள முகலாயர் சாலைக்கு மகாராஜா அக்ரசென் மார்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!