7 வயது சிறுவனின் படிப்பு பாழாகிறது- நீலகிரி மாவட்டம்

நீலகிரியில் குலதெய்வம் கோயிலுக்கு 7 வயது சிறுவனை பூசாரியாக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நெடுக்காட்டு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது என்றும், இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீலகிரி கல்வித்துறை அதிகாரி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கெத்தை அம்மன் கோயிலுக்கு பல நூற்றாண்டுகளாக  5 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களைப் பூசாரியாக நியமித்து வருகின்றனர் என்றும் பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்குகளை உடைக்க முடியாது என்றும், சிறுவனுக்கு தொடர்ந்து கல்வி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப்பதிவு செய்த நீதிபதிகள், வழக்கிற்கு இந்த சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

 

 

Translate »
error: Content is protected !!