இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இதை பற்றி கமல் ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை என அவர் பதிவிட்டுள்ளார்.