இந்த ஐந்து மாவட்டங்களில் கன மழை இருக்கு

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

03.07.2022, 04.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

05.07.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06.07.2022, 07.07.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 7, நடுவட்டம் (நீலகிரி) 6, வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 5, சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்) தலா 4, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), தேவாலா (நீலகிரி), தேக்கடி (தேனி), அவலாஞ்சி (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), பெரியார் (தேனி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 3, பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), தத்தியெங்கர்பேட்டை (திருச்சி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருப்புவனம் (சிவகங்கை), திண்டிவனம் (விழுப்புரம்), ஆயின்குடி (புதுக்கோட்டை) தலா 2, பார்வூட் (நீலகிரி), சிதம்பரம் (கடலூர்), அன்னூர் (கோயம்புத்தூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), குழித்துறை (கன்னியாகுமரி), சிதம்பரம் AWS (கடலூர்), உதகமண்டலம் (நீலகிரி), நெய்வேலி AWS (கடலூர்), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), செருமுள்ளி (நீலகிரி), அண்ணாமலை நகர் (கடலூர்), மதுரை ISRO AWS (மதுரை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

03.07.2022 குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக – ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.07.2022, 05.07.2022: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக- ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

03.07.2022 முதல் 07.07.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Translate »
error: Content is protected !!