தனியார் கிரிப்டோ கரன்சிக்கு தடை இல்லை

 

 

நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனியார் கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிக்கும் வகையிலான மசோதாவை மத்திய தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளை தடைசெய்யவும், ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும் புதிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த மசோதா மூலம் பல்வேறு தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவும், ஆர்பிஐ மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் கரன்சியை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படை திட்டத்தை வகுக்கும் வகையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு இம்மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை எனவும் இவ்விவகாரம் குறித்து இன்னும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் இதனை தற்போதைக்கு தாக்கல் செய்ய போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!