வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் 9 முறை வட்டி வீதம் மாற்றப்படவில்லை. இந்த நிலையில் ரிசர்வ வங்கி ஆளுநர் தலைமையில் இன்று நடைபெற்ற நிதி கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கு ஆளுநர் சக்திகாந்த தாஸ், குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 4 சதவீதமாகவும் நீடிப்பதாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக நீடிப்பதாகவும் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!