திருத்தணி முருகன் கோயிலில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய தரவில்லை..

திருத்தணி முருகன் கோயிலில் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சம்பளம் தரவில்லை எனக் கூறி, 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தூய்மை பணிக்கான ஒப்பந்தத்தை, ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கர் நாயுடு என்பவர் எடுத்து, திருக்கோயிலில் தூய்மை பணி மற்றும் திருக்கோயில் சார்ந்த தங்கும் விடுதிகளில் பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரிடம் 138 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக முழுமையாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி, 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், திருத்தணி முருகன் கோயில் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Translate »
error: Content is protected !!