தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, 13 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 36வது கட்ட விசாரணையில், முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராகி பதிலளித்துள்ளார்.