இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழக கடலோர மாவட்டங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக  கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26ம் தேதி தமிழக  கடலோர மாவட்டங்கள் மற்றும்  அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான  மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!