இந்தியா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளில், 10 ஆயிரத்து 718 மில்லியன் டாலருக்கு மேல் வர்த்தகம் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போரால், உக்ரைனுடனான வர்த்தக தொடர்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதா என நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான ஏற்றுமதி- இறக்குமதி வணிகத்தில் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரால், இந்தியாவிற்கு எத்தகைய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை போரின் முடிவுக்குப் பிறகு துல்லியமாக தெரிய வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.