அம்மாபேட்டையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: வாகன ஓட்டிகள் வேதனை

சேலத்தில் முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஒரே நேரத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

பாதாள சாக்கடை திட்டம் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்க திட்டம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அம்மாப்பேட்டை மிலிட்டரி சாலை, கடலூர் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை அலுவல் தொடங்கும் நேரத்தில் அம்மாப்பேட்டை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர் பெரும் அவருக்குள்ளாகின்றனர்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகளிடையே கடும் வாக்குவாதங்களும் அவ்வப்போது ஏற்படுகின்றன. போக்குவரத்து காவலர்களோ, காவல்துறையினரோ இங்கு பணியில் ஈடுபடவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றசாட்டு செய்யப்பட்டுள்ளது.

பேருந்துக்காக பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க கூடிய சூழல் ஏற்படுகிறது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையால் பயணிகளின் எண்ணிக்கை பேருந்து நிறுத்தத்தில் அதிகரிக்கிறது. இதனால் ஒரு பேருந்து வந்தவுடன் ஓடிச்சென்று முந்தியடித்து பேருந்தில் ஏற வேண்டிய அவலம் ஏற்படுகிறது.

ஒரே நேரத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இதுபோன்ற சூழல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றசாட்டு செய்யப்பட்டுள்ளளது.

Translate »
error: Content is protected !!