e-Office தொடர்பான செய்முறை பயிற்சி முகாம்… தலைமை செயலக ஊழியர்கள் பங்கேற்பு

தலைமை செயலகத்தில் பணியாற்றும் 3,645 அலுவலர்களுக்கு e-Office தொடர்பான செய்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக தலைமை செயலகத்தில் பணியாற்றும் 3,645 அலுவலர்களுக்கு e-Office தொடர்பான செய்முறை பயிற்சி முகாம் அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் தொடங்கியது. 

இதில், நிதி மற்றும் மனித வளங்கள் மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும்  தகவல்  தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கணினி முறையில் பணியாற்றுவது  தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  மேலும் திறன் மற்றும் அறிவுசார் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி 120 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகளை கையாளுவதில் இருக்கும் இடர்பாடுகளை களைவதற்கும், மக்களுக்கான சேவையை விரைந்து வழங்கும் வகையிலும் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!