கடந்த 25 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பெயர் உலக பணக்காரர்கள் குறித்த ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெறவில்லை.
ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் உள்ள டாப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி அமெரிக்காவின் முதல் 400 உலக பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 25 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பெயர் இடம்பெறவில்லை. 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வித்தியாசத்தில் 400 பெரும் பணக்காரர்கள் பட்டியிலில் முன்னாள் அதிபர் ட்ரம்பின் பெயர் இடம்பெறாமல் போனதாக கூறப்படுகிறது.
அரசியலில் நுழைந்த பிறகு தனது ரியல் எஸ்டேட் தொழிலில் ட்ரம்ப் கவனம்செலுத்தாமல் போனதே இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.