வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணையை கடலில் வீசி பரிசோதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 புத்தாண்டில் வடகொரியா செய்யும் முதல் ஏவுகணை பரிசோதனை இதுவாகும். கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்த பிறகு வடகொரியா தனது ராணுவ பலத்தை பெருமளவு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கடுமையான பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும் ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் வடகொரியா ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் தீபகற்பத்தின் கிழக்கே அடையாளம் தெரியாத ஏவுகணையை கடலில் வீசி பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், புதிய வகை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை, நீண்ட தூர கப்பல் ஏவுகணை, ரயிலில் ஏவப்பட்ட ஆயுதம் மற்றும் ஹைப்பர்சோனிக் போர்க்கப்பல் போன்ற சோதனைகளை வடகொரியா வெற்றிகரமாகச் பரிசோதித்துள்ளது குறிப்பிடதக்கது.