கேரள பல்கலை. பாடத்திட்டத்தில் பெரியார் ஈ.வெ.ராவின் கருத்து சேர்ப்பு…

கேரள பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா குறித்த வரலாறு இடம்பெற்றுள்ளது.

கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக முதுகலை MA நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த பெருவாரியான இந்துத்வா கருத்துருக்கள் நீக்கி பல்கலைக்கழக கல்வியியல் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் சங்பரிவார், தீன்தயாள் உபாத்யாயா, பல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

நவீன அரசியல் சிந்தனையில் தேசமும், தேசியமும் என்ற தலைப்பில் சாவர்க்கர், கோல்வாக்கர், ஜின்னா, அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், திராவிட தேசியம் என்ற பெயரிலான பாடத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி யின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளது திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!