இந்தியாவில் கொரோனா குறைந்து வரும் சூழலில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடாமல் இருப்பதற்காகவும், தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையிலும் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாதவர்களுக்கான பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் நீக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.