அகமதாபாத் குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் குடும்பம் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதாக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் 4-வது கட்ட பிரச்சாரத்தை பிலிபிட்டில் துவங்கிய யோகி ஆதித்யநாத், கடந்த ஆட்சியில் ஏழைகள் பட்டினியால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். மாநிலத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் சிறு வணிகர்கள் அழிக்கப்பட்டதாகவும், இதனாலேயே இளைஞர்களுக்கு வேலையில்லா திட்டம் அதிகரித்ததாகவும் கூறினார். ஆனால் பாஜக ஆட்சியில் மாநிலத்தை முன்னேற்ற கூடிய வகையில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.