15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி – அமைச்சர் மா.சு

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியது, தமிழகம் முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி 3-ம் தேதி சென்னை போரூர் பகுதியில் தொடங்கி வைக்கிறார். மேலும், பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்,” என்று கேட்டு கொண்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!