15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்திய வாகனங்கள் அழிக்கப்படும்

தமிழ்நாடு அரசு வாகனங்களில், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு மற்றும் அதனை சார்ந்த துறைகள்,  உள்ளாட்சி  அமைப்புகளான நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் பதிவு செய்து 15 ஆண்டு காலத்திற்கு மேலான வாகனங்களை அழிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை செயல்படுத்தும் வகையில், அனைத்து மண்டல அதிகாரிகளும்  ஆணையருக்கும் போக்குவரத்துத்துறை ஆணையர் நடராஜன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வருகிற மார்ச் 31ம் தேதியுடன் பதிவு செய்து 15 ஆண்டுகளான வாகனங்களின் பட்டியலை அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!