டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் அங்கு அமலில் இருந்த வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரவு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசுக்கும், கவர்னருக்கும்இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-
டெல்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து; இரவு ஊரடங்கு நீடிக்கும். டெல்லியில் 200 பேர் திருமணத்திற்கு அனுமதி; பார்கள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் 50 சதவீத இறக்கைகளுடன் திறக்கப்படும். பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பள்ளிகள் திறப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.