உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மேற்குவங்க மாணவர்களுடன் உரையாடிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
உக்ரைனில் தவித்த இந்தியர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்தநிலையில் அங்கு கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு நாடு திரும்பிய மேற்குவங்க மாணவர்களை, கொல்கத்தாவில் சந்தித்த மம்தா, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் அரசு மருத்துவ கல்லூரிகளில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் மருத்துவ கவுன்சில் கமிட்டியிடம் வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இதேபோல் பொறியியல் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் கல்வியை தொடர வழிவகை செய்யப்படும் எனவும் உறுதி கூறினார்.