தொழிற்பயிற்சி நிலையத்திற்குள் காட்டெருமைகள் – நீலகிரி குன்னூர்

நீலகிரி குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்குள் இன்று காலையில் 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர்.

 

குன்னூர் அருகேயுள்ள சிம்ஸ் பூங்கா அருகில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து உணவை தேடி காட்டெருமைகள் வருவதால் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட ஒருவரையும், அவ்வழியாக சென்ற முதியவர் ஒருவரையும் தாக்கியதால் சம்ப இடத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தொழிற்பயிற்சி நிலையத்தில்10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டியுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்குள் புகுந்ததால் மாணவர்கள் நுழைவாயிலில் செல்ல முடியாமல் அச்சத்துடன் இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்குள் இருந்த காட்டெருமைகளை விரட்டினர்.

 

Translate »
error: Content is protected !!