குளிர்கால ஒலிம்பிக் போட்டி புறக்கணிப்பு – அமெரிக்கா அறிவிப்பு

 

சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்த போட்டிகளைக் காண சிறப்புத் தூதர்களாக பங்கேற்பார்கள். இந்தநிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 – 20ஆம் தேதி வரை சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. இந்தநிலையில் சீனாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் பொருட்டு, இந்த குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியில் புறக்கணிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வந்தது . இந்த நிலையில் பீஜிங் நகரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!