சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

 

லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தின் போது நடந்த வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதைக் கவனத்தில் கொண்ட தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, வழக்கில் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

 

Translate »
error: Content is protected !!