திருத்தணி அருகே பள்ளிப்பட்டு தாலுகாவில் செல்லும் லவ்வா ஆற்றில் இரவில் மீன் பிடிக்கச் சென்ற பாலாஜி என்ற இளைஞர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டடுள்ளார். அவரை தேடும் பணி 14- மணி நேரமாக தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் பாலாஜியின் உடலை கிடைக்காததால் உணவு இடைவேளைக்காக தீயணைப்பு படையினர் சென்றனர்.
ஆகையால், தொடர்ந்து தேடுதல் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபடவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து பாலாஜியின் உறவினர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி இயந்திரம் மற்றும் ஆட்கள் மூலம் ஆற்றுக்குள் இறங்கி பாலாஜியை தேடியபோது 40 நிமிடங்களுக்கு பின் மண்ணில் சிக்கிக் கொண்டிருந்த பாலாஜியின் உடலை மீட்டு எடுத்தனர் அவரது உறவினர்கள். தற்போது ஆற்றங்கரையோரம் பாலாஜியின் உடலை வைத்து கதறி அழுது வருகிறார்கள், அவரது உடலை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க போலீசார் பேச்சுவார்த்தை செய்து வருகின்றனர்.