தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது..
அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி. ஏற்கனவே எந்த எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதோ அந்த கட்சிகள் தற்போதும் இருக்கிறது.புதிதாக வேறு கட்சிகள் இணைவது தேர்தல் நேரத்தில் தான் தெரியும், சசிகலா வெளியே வந்த பிறகு அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது, பா.ஜ.க தற்போது வரை எங்கள் கூட்டணியில் இருப்பதாக தான் கூறுகிறார்கள். நாட்கள் குறைவு மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு.தேர்தலில் வெற்றி பெற கூட்டணிகள் அமைக்கப்படுகிறது. ஸ்டாலின் திமுக வை காப்பாற்றுவதை முதலில் பார்க்கட்டும். சட்டத்திற்கு புறம்பாக இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.ஆறு முறை எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிட்டு இருந்தேன்.
மீண்டும் அங்கு தான் போட்டியிடுவேன், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி உறுதியாகும். இரவு பகல் பாராமல் நான் உழைக்கிறேன்.பெரும்பான்மை இடங்களில் மக்கள் எங்களை வெற்றி பெற செய்வார்கள். நான் அரசியலில் இருக்கும் வரை எடப்பாடியில் தான் போட்டியிடுவேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி இறுதி செய்யப்படும். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அரசியலில் இருக்கும் வரை எடப்பாடியில்தான் போட்டி.
உட்கட்சி பூசல் குறித்த கேள்விக்கு உட்கட்சி பூசல் இந்தியா முழுவதும் உள்ளது. வளர்கிற கட்சியில் உட்கட்சி பூசல் இருக்கும்.காய்ச்ச மரம் தான் கல்லடி படும். ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா? என்கிற கேள்விக்கு ரஜினி உடல்நலம் பெற வேண்டும். மற்றவை பிறகுதான். மாணவர்கள் பொது தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுப்போம். பொதுக்குழு முடிந்ததும் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வார்.