அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு, செல்ல பிராணியுடன் விளையாடியக் கொண்டிருந்த போது, வலது காலில் காயம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் டிரம்பை தோற்கடித்து, வெற்றி பெற்றுள்ளார் ஜோ பிடன். ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில், ஜோ பைடன் தனது செல்லப்பிராணியான வளர்ப்பு நாய் ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராதவிதமாக வலது காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று டெலாவேரின் நெவார்க் பகுதியில் உள்ள எலும்பியல் நிபுணர் ஜோ பிடனை பரிசோதித்துள்ளார். இதில், அவரது வலது காலின் கணுக்கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. சிறப்புக் காலணி அணிந்து, இரு வாரங்களுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பிடனுக்கு காயம் ஏற்பட்டிருப்பது, அமெரிக்க ஊடங்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.