அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து…தமிழக முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி

சென்னை,

ஆசிரியர், -அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையினை ரத்து செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.

‘‘2019 ல் ஆசிரியர்அரசு ஊழியர்கள் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை திரும்பப்பெற தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தமிழக முதல்வரை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோடு கடந்தமாதம் 4.1.2021 அன்று பள்ளிக்கல்வித்துறை ஆணையரை நேரில் சந்தித்து துறை ரீதியதாக வலியுறுத்தவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகோள் வைத்தோம்.

மேலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர், –அரசு ஊழியர்கள் பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வந்தார்கள். இந்நிலையில் தமிழக முதல்வர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான 7,898 ஆசிரியர்,- அரசு ஊழியர்கள் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 17,686 ஆசிரியர்கள்ஊழியர்கள் மீது பதியபட்ட 408 வழக்குகளையும் திரும்பப்பெறுவதாக அறிவித்த அறிவிப்பு மூலம் பாதிக்கபட்ட ஆசிரியர், –அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

மறப்போம் மன்னிப்போம்என்ற அடிப்படையில் தமிழக முதல்வரின் அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றோம். அதேவேளையில் கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றித்தர ஆவன செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறோம்’’.

 

 

Translate »
error: Content is protected !!