இது தான் போலீஸின் வேகம்… அரை மணிநரத்தில் திருடு போன ஆட்டோ மீட்பு… திருடன் கைது

சென்னை

சென்னை வேளச்சேரியில் திருடு போன ஆட்டோவை போலீசார் அரை மணிநேரத்தில் மீட்டு  திருடனை கைது செய்தனர்.

சென்னை, வேளச்சேரி, ஒண்டியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பழனி (வயது 38). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது ஆட்டோவை தனது வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சென்றார். அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது அதனை காணவில்லை.

அது தொடர்பாக அவர் வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். அடையாறு துணைக்கமினர் விக்ரமன் மேற்பார்வையில் வேளச்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதனையடுத்து சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 38)  என்பவரை கைது செய்தனர். விசாரணையில் ஆட்டோவின் சாவி மற்றும் சீட்டை உடைத்து அவர் ஆட்டோவை திருடிச் சென்றது தெரிய வந்தது.

ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோ திருடன் சரவணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். புகார் அளித்த உடனே அதிரடி நடவடிக்கையில் இறங்கி ஆட்டோவை பறிமுதல் செய்து திருடனை கைது செய்த இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்

Translate »
error: Content is protected !!