இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரம் 158 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 41,511 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 11 லட்சத்து 80 ஆயிரத்து 968 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,88,508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 373 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 28 ஆயிரம் 682 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 51 கோடி 45 லட்சத்து 00 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.