இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32,937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரம் 513 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 35,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 14 லட்சத்து 11 ஆயிரத்து 924 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,81,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 417 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 31 ஆயிரம் 642 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 54. 58 கோடி பேருக்குதடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.