மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,617 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 853 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில்
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 04 லட்சத்து 58 ஆயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 48 ஆயிரத்து 302 அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 09 ஆயிரத்து 637 ஆக உள்ளது. இறப்பு எண்ணிக்கை இதுவரை 4 லட்சம் 312 ஆக அதிகரித்துள்ளது.