இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கியது; இது, 6.3 ரிக்டராக பதிவாகி இருக்கிறது.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் புவிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்ததாகவும், நிலநடுக்க மையத்தில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவு வரை அதிர்வை உணர முடிந்ததாகவும் இந்தோனேசிய புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு திறந்த வெளிக்கு வந்து குழுமினர்.
எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்தோ, சுனாமி அபாயம் உள்ளதா என்ற தகவலோ இதுவரை இல்லை.