ஜம்மு–காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜம்மு–காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களித்துள்ளனர். மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வெளியே வந்து வளர்ச்சிக்கு வாக்களித்தனர். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ய பார்வையை ஜம்மு–காஷ்மீர் வென்றுள்ளது.
புதுச்சேரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் அரசாங்கம் நடத்துகின்றனர். எல்லைப்பகுதிகளில் நடக்கும் தாக்குதல் எப்போதும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. சம்பா, பூஞ்ச், கத்துவா உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பதுங்கு குழிகளை நிர்மாணிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.