எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த கையில் கருப்பு பட்டை அணிந்தபடி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணி பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இன்று சென்னையில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மரணமடைந்ததால் அவருக்கு தங்களின் மரியாதையை செலுத்தும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து இன்றைய போட்டியில் பங்கேற்று உள்ளார்கள். அது தொடர்பான படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. எந்த பாடகருக்கும் கிடைக்காத புகழ் எஸ்பிபிக்கு உலக அளவில் மரியாதை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!