கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓரேநாளில் சிகிக்சை பலனின்றி 13 பேர் பலியானதை தொடர்ந்து இதுவரை மாவட்டம் முழுவதும் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவரின் குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சுகாதார துறை ஊழியர்கள் கிருமி நாசினி மருந்துகள் தெளித்தனர்.