தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி 15707 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி உள்ளது .ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம் ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அணையின் நீர் இருப்பு போதிய அளவு இல்லாததால் இரண்டு மாதம் தாமதமாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் தண்ணீர் திறக்கப்பட்டு இருபோக சாகுபடி முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்ததால் ஜூனில் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது கூடலூர் கம்பம் ,உத்தமபாளையம் ,சின்னமனூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் வளர்க்கும் பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கூடலூர் ,பொட்டன் குளம் ,ஒழுகு புலி, தாமரைக்குளம் பகுதிகளில் நெல் பயிர்களில் நீர் நிரம்பி தொழி டிராக்டர்கள் மூலம் சமன் செய்யும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர். சரியான நேரத்தில் தண்ணீர் திறப்பு தென்மேற்கு பருவமழையும் கைகொடுத்தது ஆண்டுகளில் சாகுபடி முழுமையாக செய்ய முடியும் என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர்.