சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு விமானத்தில் சாரஸ் போதைப்பொருள் கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 3 கிலோ சாரஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தப்படவிருப்பதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் சென்னை பன்னாட்டு விமான
நிலையத்தில் பயணிகள் அமரும் அறையை கண்காணித்தனர். அப்போது அமர்ந்திருந்த சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கற்பகம் என்ற பெண்ணின் பேக்கை சோதனை செய்தனர். உள்ளே தெர்மாகூல் சுற்றப்பட்டு இருந்த பார்சலை சந்தேகத்தின்
பேரில் பிரித்து பார்த்து சோதனையிட்டனர். உள்ளே 3 கிலோ சாரஸ் என்ற போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது. தெரியவந்தது. சாரஸ் கஞ்சாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஆஷிஷ் என்ற போதைப்பொருளில் இருந்து
தயாரிக்கப்படுவதாகும். இதற்கு வெளிநாடுகளில் நல்ல விலை உள்ளது. இதனால் இதனை சென்னையில் இருந்து கற்பகம் கடத்திச்சென்றது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் இந்த போதை பிஸ்னசுக்கு அவருக்கு உடந்தையாக இருந்த
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மொய்தீன் என்பவரையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த போதை கடத்தல் பிஸ்னசில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.